தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை

ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை

ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : மே 23, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேப்பூர்: ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் 10ம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.

வேப்பூர் அடுத்த என்.நாரையூர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றும், 100 சதவீத தேர்ச்சி பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரியங்கா 491; மீரா 490; ஆப்ரின் பாத்திமா 488; ஆகிய மதிப்பெண்களை பெற்றனர்.

பி ளஸ் 2 தேர்வு எழுதிய அருணா 577; மோனிஷா 573; பிரதிக் ஷா 572; ஆகிய மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள னர்.

இதன்மூலம் வேப்பூர் தாலுகா, விருத்தாசலம் கல்வி மாவட்டம் மற்றும் கடலுார் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

10 மற்றும் பிளஸ் 2 வகுப்ப அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை, மாவட்ட கல்வி அலுவலர் மோகன் பாராட்டினார்.

தொடர்ந்து, சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் கதிரவன் சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

அப்போது, பள்ளி துணை தாளாளர்கள் அவினாஷ், அக்சயா, முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் சம்பத்குமார், நிர்வாக அலுவலர் சுஜாதா, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us