/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராமகிருஷ்ணாபுரம் கோவில் கும்பாபிஷேகம் ஆனந்தபவன் ஓட்டல் குடும்பத்தினர் பங்கேற்பு

ADDED : பிப் 04, 2025 06:27 AM

கடலுார்: ராமகிருஷ்ணாபுரம் சிவனணைந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், கடலுார் ஆனந்தபவன் ஓட்டல் உரிமையாளர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் சிவனணைந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி நடந்தது. அன்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் பேச்சி அம்மன், சிவனணைந்த பெருமாள், சுடலைமாட சுவாமி, முண்டசுவாமி மற்றும் பரிவார தேவதைகள் சன்னதிகளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.
விழாவில் கடலுார் ஆனந்தபவன் ஓட்டல் உரிமையாளர்கள் நாராயணன், ராம்கி நாராயணன், மதுரை அஸ்டோரியா உரிமையாளர் ராமகிருஷ்ணன், கவுதம் ராமகிருஷ்ணன், மதுரை பிருந்தாவன் ஓட்டல் ரவி, கோயம்புத்துார் பகவந்த், திருச்சி காஞ்சனா ஓட்டல் உரிமையாளர் குமார், அரசு வழக்கறிஞர் சங்கர், உமாசங்கர் ஓட்டல் முத்துராஜ், இலங்கை மணி, திருநெல்வேலி பரணி ஓட்டல் பங்குதாரர் அஜய் ஜானகிராம் மற்றும் ஏ.ஆர்., மணி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.