/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறந்த கல்வி சேவையில் ரத்தனா பள்ளி முதன்மை
/
சிறந்த கல்வி சேவையில் ரத்தனா பள்ளி முதன்மை
ADDED : ஏப் 27, 2025 06:52 AM

பண்ருட்டி :   பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறந்த கல்வி வழங்குவதில் முதன்மை பெற்றுள்ளது.
பண்ருட்டி லட்சுமிபதி நகரில் ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்த 2009ம் ஆண்டு மாயகிருஷ்ணன் என்பவரால் துவங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி, இயக்குனர்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் சீரிய முயற்சியில் பள்ளி சிறப்பாக செயல்படுகிறது.
பள்ளியில் காற்றோற்றமான அறைகள், சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர், டிஜிட்டல் வகுப்பறைகள் உள்ளன. அனுபவம் வாயந்த ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீத தேர்ச்சியை முன்னிறுத்தி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று, விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், மல்லர் கம்பம், யோகா, கராத்தே போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
உலகதரம் வாய்ந்த இறகுபந்து விளையாட்டரங்கம் உள்ளது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மடிக்கணினி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. தற்போது எல்.கே.ஜி. முதல் பிளஸ்1 வரை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

