இலவச வேட்டி, சேலை 'மிஸ்சிங்' ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி
இலவச வேட்டி, சேலை 'மிஸ்சிங்' ரேஷன் கார்டுதாரர்கள் அதிருப்தி
ADDED : ஜன 21, 2026 06:32 AM
பொ ங்கல் பண்டிகைக்காக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி, சேலை வழங்க அரசு திட்டமிட்டது.
அதன்படி, 1 கிலோ அரிசி, 1 கிலோ பச்சரிசி, 1 முழுக் கரும்பு, 3,000 ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் ரேஷன் கடைகளில் கடந்த, 8ம் தேதி துவங்கியது.
கடலுார் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, 1 முழுக் கரும்பு, 3,000 ரூபாய் ரொக்கத்துடன், வேட்டி, சேலை வழங்கப்ப ட்டது.
ஆனால், கடலுார் உட்பட பல்வேறு மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் 20 சதவீதம் பேருக்கு வேட்டி, சேலை முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரேஷன் கார்டு எண்ணிக்கைக்கேற்ப வேட்டி, சேலை வழங்காததால் பொங்கல் பண்டிகை முடிந்து வந்து வாங்கிக்கொள்ளுமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கூறிவிட்டனர்.
இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. விடுபட்டவர்களுக்கு வேட்டி, சேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
