/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்
/
ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஏப் 16, 2025 07:39 AM
நெல்லிக்குப்பம், : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக பண்ருட்டி தாலுகாவில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி துவங்கியது.
பண்ருட்டி தாலுகா உட்பட்ட பகுதிகளில் புதியதாக திருமணம் ஆனவர்கள்,தனி குடித்தனம் சென்றவர்கள் என பல ஆயிரம் பேர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு ரேஷன் அட்டை தயாராகியுள்ளதாக பயனாளிகளுக்கு ஆறு மாதத்துக்கு முன் குறுஞ்செய்தி அனுப்பினர்.
அட்டை கிடைத்து விட்டது என பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஆறு மாதமாகியும் அட்டை வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, புதிய ரேஷன்கார்டுதாரர்களை தொடர்பு கொண்ட அதிகாரிகள் ரேஷன் அட்டையை பெற்று செல்ல கூறியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

