தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரேஷன் அரிசி பதுக்கல்: வேலுார் ஆசாமி கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: வேலுார் ஆசாமி கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: வேலுார் ஆசாமி கைது


UPDATED : ஆக 17, 2026 06:57 PM

ADDED : ஆக 17, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2026 06:57 PM ADDED : ஆக 17, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி:பண்ருட்டி அருகே ஏரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வேலுார் ஆசாமியை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 26 சிப்பம் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார் கிராமத்தில் உள்ள ஏரியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, வாத்துக்கு உணவாக வழங்குவதாக கடலுார் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீரப்பெருமாநல்லுார் பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த வாத்து பண்ணை அருகே இருந்த கொட்டகையில் சோதனை செய்ததில், அங்கு, 50 கிலோ எடை கொண்ட 26 சிப்பங்களில், 1,300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் டி.என்.,83.யூ.6265 பதிவெண் கொண்ட பைக் ஒன்று இருந்தது.

விசாரணையில், வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த சஞ்சீவிராயபுரம் ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் பூபதி,24; என்பவர், இங்கு, வாத்து பண்ணை நடத்தி வருவதும், வாத்திற்கு தீவனமாக கொடுக்க ரேஷன் அரிசி மூட்டைகளை வாங்கி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, பூபதியை கைது செய்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 26 சிப்பம் ரேஷன் அரிசி, ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us