ADDED : மே 07, 2026 04:25 AM

வடலுார்: ரேஷன் அரிசி கடத்திய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வடலுார் போலீஸ் எஸ்.ஐ., முகிலரசு தலைமையிலான போலீசார் குழுவினர், நேற்று அப்பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பொலிரோ வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
போலீசார் விசாரணையில் திருச்சி, அரியமங்கலம் தாலுகா, உக்கடை பகுதியை சேர்ந்த அன்பழகன், 45; என்பவர், 45 கிலோ எடை கொண்ட, 50 மூட்டைகள் ரேஷன் அரிசியை கடத்தியது தெரிந்தது.
அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரால் கைது செய்யப்பட்ட ரேஷன் அரிசி கடத்திய அன்பழகன், கடலுார் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
