/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் அரிசி கடத்தல்: டிரைவர் கைது
/
ரேஷன் அரிசி கடத்தல்: டிரைவர் கைது
ADDED : நவ 08, 2025 01:48 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே 'பால் வேன்' என எழுதப்பட்ட வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.கொல்லத்தங்குறிச்சியில் நேற்று காலை 7:30 மணியளவில் 'பால்' என எழுதப்பட்டிருந்த டாடா பிக்கப் வேனில், வெளி மாவட்டத்திற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச் செல்வதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வேனை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் 50 கிலோ எடையுள்ள, 25 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வேன் டிரைவர் திருச்சி, தென்னுார், ஆழ்வார் தோப்பு பகுதியைச் அப்துல் சுக்கூர், 36; என்பவரை விசாரித்தனர்.
அதில், திருச்சி அருகே இயங்கும் கோழி பண்ணைக்கு அரிசி வாங்கி செல்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவரை கைது செய்தனர். வேன் மற்றும் ரேஷன் அரிசியை மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவினரிடம் பெண்ணாடம் போலீசார் ஒப்படைத்தனர்.

