ADDED : அக் 26, 2026 04:38 PM

பரங்கிப்பேட்டை: புவனகிரி அருகே புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ., திறந்த வைத்தார்.
புவனகிரி அடுத்த சிலுவைபுரத்தில் ரேஷன் கடை இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து ரூ.5 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டுகீரப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், ஒப்படைக்கப்பட்டது.
இந்த ரேஷன் கடை திறப்பு விழா இன்று (அக்.,26) நடந்தது. கீரப்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலாளர் சகாயசெல்வன் தலைமை தாங்கினார்.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர்கள் பாலமுருகன், அருளழகன் முன்னிலை வகித்தனர். அருண்மொழித்தேவன் ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
விழாவில், பொது விநியோக திட்ட அலுவலர் நாகராஜன், கள அலுவலர் சுரேஷ்,ஸ்டாலின், மாவட்ட துணை செயலாளர் வீரமூர்த்தி, அ.தி.மு.க., நிர்வாகிகள் ராசாங்கம், சுப்ரமணியன், செல்வரங்கம், செல்லப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.கீரப்பாளையம் கூட்டுறவு வங்கி செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
