
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் ரேஷன் கடையில் மண்டல இணைப் பதிவாளர் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை வளாக ரேஷன் கடையில் மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் (பி.ஓ.எஸ்), ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு ஆகியவற்றின் இருப்பு விவரம் மற்றும் ரேஷன் அட்டைகளை ஆய்வு செய்தார்.
ரேஷன் அட்டைதாரர்களிடம் எவ்வித புகாரும் வராமல் விநியோகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென, விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
பொது விநியோகத்திட்ட கூட்டுறவு சார் பதிவாளர்கள் சரண்யா, வேல்முருகன், சுரேஷ் உடனிருந்தனர்.

