ADDED : பிப் 02, 2026 03:47 AM

கிள்ளை: சிதம்பரம் அடுத்த நக்கரவந்தன்குடி ஊராட்சியில் நேற்று சிதம்பரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 13 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். பிச்சாவரம் கூட்டுறவு வங்கி செயலாளர் முத்துக்குமரசாமி வரவேற்றார்.
புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
விழாவில், முன்னாள் ஊராட்சி தலைவர் தியாகராஜன், ராம் மகேஷ், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு பொருளாளர் சுவாமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாலாஜி, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராம் மகேஷ், நிர்வாகிகள் குணசேகரன், மதிவாணன், கணேசன், சிந்தனைச்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

