/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 11, 2026 03:46 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கந்தன், மாவட்ட அமைப்பு செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் கலைச்செல்வன், முரளி, தமிழ்செல்வன், செல்லதுரை, கனகசபை, நரசிம்மன் முன்னிலை வகித்தனர். பழனிசாமி வரவேற்றார். மாநில தலைவர் ஜெயசந்திரராஜா, சிறப்புரையாற்றினார். பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை, ரேஷன்கடை பணியாளருக்கு ஓய்வூதியம், அனைத்துக் கடைகளுக்கும் எடையாளர் நியமனம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

