/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தன்னம்பிக்கையோடு படியுங்கள்: மாணவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்
/
தன்னம்பிக்கையோடு படியுங்கள்: மாணவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்
தன்னம்பிக்கையோடு படியுங்கள்: மாணவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்
தன்னம்பிக்கையோடு படியுங்கள்: மாணவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்
ADDED : பிப் 15, 2024 05:56 AM

பண்ருட்டி, : மாணவர்கள் தன்னம்பிக்கையோடு படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என, கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுரை கூறினார்.
பண்ருட்டி முத்தையர் மேல்நிலைப் பள்ளியில் வளர் இளம்பருவத்தினர் போதை குறித்து விழிப்புணர்வு மீட்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் வரவேற்றார். எஸ்.பி.ராஜாராம் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., க்கள் சவுமியா, பழனி, மாவட்ட உணவுபாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார், புகையிலை தடுப்புபிரிவு அபிநயா, டாக்டர் அறிவொளி, கலால் தாசில்தார் அன்பழகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சாளர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி, போதை தவிர்ப்பு குறித்து விளக்கயுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசுகையில், ' புத்தகம் அதிகம் படிக்க வேண்டும். மொபைல் போனை ஆரோக்கியமான தேடுதலுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். சிகரெட், கஞ்சா, கூலிப், குடிபோதைகள் மாணவர்களுக்கு தேவையில்லாதது. தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். பெற்றோர் இல்லை, வசதி இல்லை என கூறி படிப்பதை தவிர்ப்பது தவறு. கல்வியில் சிறந்து விளங்கவும், வாழ்க்கையில் முன்னேற படிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்' என, தெரிவித்தார்.

