வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் திருக்குறள் போட்டிகள் அறிவிப்பு
வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் திருக்குறள் போட்டிகள் அறிவிப்பு
UPDATED : அக் 29, 2026 10:33 PM
ADDED : அக் 29, 2026 10:28 PM
சிதம்பரம்: குழந்தைகள் தினத்தையொட்டி, வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் சார்ந்த போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது வகுப்பு தமிழ் பாடநூலில் உள்ள திருக்குறளில் இருந்து ஏதாவது ஒரு குறள் குறித்து கட்டுரை எழுத வேண்டும். எனக்கு பிடித்த திருக்குறள் என்றத் தலைப்பில் அந்த மாணவருக்கு பிடித்த குறள் குறித்து குறளுக்கான பொருள், அந்தக் குறளை தான் விரும்பியதற்கான காரணம் ஆகியவற்றை விரிவான கட்டுரையாக எழுதி ஒருங்கிணைப்பாளர், வாசிப்பு மேம்பாட்டு இயக்கம், 50 லால்கான் தெரு சிதம்பரம் 608 001, கைபேசி 94430 46295 என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பள்ளிகள் சார்பில் மாணவர்களிடமிருந்து கட்டுரைகளை மொத்தமாக சேகரித்து ஒரே பார்சலிலும் அனுப்பலாம். பங்கேற்ற அனைவருக்கும் பேனா ஒன்றும், சிறந்தக் கட்டுரைகளுக்கு இறையன்பு எழுதியப் புத்தகமும் பரிசாக வழங்கப்படும.
இத்தகவலை வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
