/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதிவுத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
/
பதிவுத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
பதிவுத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
பதிவுத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்
ADDED : டிச 09, 2024 10:18 PM

கடலுார்; கடலுார் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில், பதிவுத்துறை அனைத்து நிலை பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் மீது தனிநபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதை கண்டித்து, நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டது. இச்ம்பவத்தை கண்டித்தும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் மற்றும் பதவி உயர்வு வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள 6 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 60 சார் பதிவாளர் அலுவலகங்கள் உட்பட 74 அலுவலகங்களில் நேற்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் 2 மணி நேரம் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் பத்திரப்பதிவிற்கு வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில், சார் பதிவாளர் சபுரா பேகம் தலைமையில் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

