ADDED : ஏப் 18, 2026 06:08 PM

கடலுார்: கடலுாரில் சட்டவிரோத கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கான ஓத்திகை நடந்தது.
கடலுார் ஆயுதபடை மைதானத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில், சட்டவிரோத கும்பலை கட்டுப்படுத்துவது குறித்து ஓத்திகை நடந்தது. சட்டவிரோத கும்பலால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழலில் கும்பலை கலைக்க போலீசார் முதலில் எச்சரிக்கை விடுப்பது; கலையாத கும்பல் மீது வாகனம் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடிப்பது; கண்ணீர் புகை குண்டுகள் மூலமாக கும்பலை கலைக்க முயற்சி செய்வது; இதனையும் மீறி கலவரம் ஏற்படுத்தும் கும்பல் மீது தடியடி நடத்தி கட்டுப்படுத்துவது; வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கட்டுப்படுத்துவது; என, ஒத்திகை நடந்தது.
முன்னதாக தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தலின் போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் சட்ட விரோத கும்பலை எப்படி கையாள்வது குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். டி.எஸ்.பி., அப்பாண்டைராஜ், (பயிற்சி ) சரவணகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
