/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் 'ஆட்டை'
/
கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்கள் 'ஆட்டை'
ADDED : ஜன 03, 2024 12:36 AM
கடலுார் கலெக்டராக சந்திரசேகர சகாமுரி பணிபுரிந்த போது, கலெக்டர் அலுவலக வளாகத்தில் முட்புதர்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.
அந்த இடங்களில் தோட்டம் அமைக்க 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டது. சொட்டு நீர் பாசன பைப் மூலமாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது.
பயன்படுத்தியது போக எஞ்சியிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொட்டுநீர் பாசன பைப் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே போடப்பட்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன் அந்த பைப்புகளை, யாரோ 'ஆட்டய' போட்டுள்ளனர்.
இதே போன்று, சென்னை வெள்ள பாதிப்புக்கு வந்த வெள்ள நிவாரண பொருட்களையும் 'ஆட்டய' போட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களை திருடும் சம்பவமும் அரங்கேறுவதால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.