ADDED : செப் 07, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம், செப். 8 –
காட்டுமன்னார்கோவிலில், புலவர் துரை நாகராசனாரின் 14ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமைய தாங்கி, துரை நாகராசனார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, எள்ளேரி ஆனந்தம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி பாலசந்தர், அறக்கட்டளை நிர்வாகிகள் அருள் பிரகாசம், சுபாஷ், காவியன், விஷ்ணுதேவன், அ.தி.மு.க., நிர்வாகிகள் சுவாமிநாத சிவப்பிரகாசம், செந்தில்குமார், சிவகுமார், ராஜா, மாணிக்கவேல், தோத்தாத்திரி, மயில். குணசேகரன், செந்தில்குமார், பாரதிதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கார்த்திகேயன் நன்றி கூறினார்.
