ADDED : செப் 06, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட நந்தப்பாடி - தொழுதுார், இறையூர் - வேப்பூர், இறையூர் - நல்லுார், திட்டக்குடி - ஆவட்டி - சிறுபாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் சாலையின் குறுக்கே உள்ள கல்வெர்ட் மற்றும் சிறுபாலங்களில் முட்புதர்கள் அதிகளவில் மண்டியுள்ளன. இதனால், மழைநீர் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது.
இதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், திட்டக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட சாலைகளின் குறுக்கே உள்ள கல்வெர்ட், சிறுபாலங்களில் முட்புதர்கள், மண் அகற்றுவது, கல்வெர்ட், சிறுபாலங்களில் வர்ணம் அடிப்பது உள்ளிட்ட பணிகளில் சாலை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.