/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
ஸ்ரீமுஷ்ணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : செப் 22, 2024 02:19 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம்பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு இடையூறாக இருந்த நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதிலும் அளவீடுபணிகளிலும் பிரச்னை ஏற்பட்டது.அதனால் மீண்டும் அளவீடு செய்து நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் சேகர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் விமல் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன்,சப் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.