/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
விருத்தாசலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மார் 06, 2024 11:21 PM

விருத்தாசலம், - விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பாலாம்பிகை தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த தெருவில் உள்ள சாலையில் தனிநபர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.
இதனை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், தாசில்தார் உதயகுமார் தலைமையில், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
அப்போது, தனிநபர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தாசில்தார் உதயகுமார் ஆக்கிரமிப்பாளர்களை பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.
அதனைத்தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

