ADDED : ஏப் 29, 2025 09:43 AM

கடலுார்; கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த பிப்ரவரியில் கடலுார் வந்திருந்த போது, 35கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சக்குப்பம் மைதானத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அதன்படி மஞ்சக்குப்பம் மைதானத்தை சுத்தம் செய்து, சுற்றிலும் மதில்சுவர் அமைத்து நான்கு பக்கமும் வாயில் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
இதற்காக, பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் இருந்த கடைகளை அகற்ற உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சிலர் தாங்களாகவே அகற்றிக்கொண்ட நிலையில், சிலர் மாற்று இடம் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
நேற்று மைதானத்தில் இருந்த 13 கடைகள், கிரேன் மூலம் அகற்றப்பட்டு கோர்ட்டுக்கு எதிரிலுள்ள பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டது.

