sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு 

/

 புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு 

 புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு 

 புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு 


ADDED : ஜன 11, 2026 06:49 AM

Google News

ADDED : ஜன 11, 2026 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்.

கடலுார் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி திறந்து வைத்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது:

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள கடலுார் மாவட்டப் பிரிவின் பல்நோக்கு உள்விளையாட்டரங்க உடற்பயிற்சி கூடத்தில் மாணவ, மாணவியர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தற்போது பல்வேறு வகையான உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த உடற்பயிற்சிக் கூடம் காலை மற்றும் மாலை என இருவேளையும் ஆண், பெண் என இருபாலரும் பயனடையும் வகையில் செயல்படும்.

இப்பயிற்சி பெறுவதற்கு மாதந்தோறும் குறைந்த கட்டணமாக 840 ரூபாய் செலுத்தினால் மட்டுமே போதுமானது. இதனை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், விளையாட்டரங்கில் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் நீச்சல் குளம் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக நீச்சல் குளம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகள் கோடை காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், விளையாட்டரங்கிற்கு தேவையான போதிய கழிவறை வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us