/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையால் உடைந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைப்பு
/
மழையால் உடைந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைப்பு
ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே மழையால் மின்கம்பங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டதையடுத்து, மின் கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி நடந்தது.சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லையில் நேற்று முன்தினம் காற்று இடியுடன் மழை பெய்தது.
அப்போது, அந்த கிராம வயல்வெளியில் மின்கம்பங்கள் முறிந்து மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த சேத்தியாத்தோப்பு துணை மின்நிலைய உதவி மின்செயற்பொறியாளர் பழனிவேல், உதவி மின்பொறியாளர் அம்பேத்கர் ஆகியோர் புதிய மின்கம்பங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதன்படி நேற்று மின்பாதை ஆய்வாளர் ரவிச்சந்திரன், முகவர் அழகேசன், வெற்றிவேல் மற்றும் ஊழியர்கள் புதிய கம்பம் எடுத்து சென்று நட்டு மின்சார இணைப்பை வழங்கினர்.