/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
/
பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 27, 2025 12:56 AM

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
சிதம்பரம்
சிதம்பரம் சி.வக்கராமாரியில் உள்ள வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர்மன் குமார் தேசிய கொடியேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி பேசினார். பள்ளி முதல்வர் ராதிகா, ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
புவனகிரி
புவனகிரி அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் உதவி தலைமை ஆசிரியை எழிலரசி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தேவதாஸ் படையாண்டவர், அமுதாராணி, வழக்கறிஞர் குணசேகரன், கல்விக் குழு தலைவர் சாந்தலெட்சுமி, துணைத் தலைவர் காந்தழகி முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை சரவணஜான்சிராணி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி ஆசிரியை செந்தில் வடிவு நன்றி கூறினார்.
எம்.ஆர்.கே., கல்லுாரி
கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.ஆர்.கே., நினைவு அறக்கட்டளை தாளாளர் ெதய்வசிகாமணி தேசிய கொடி ஏற்றி வைத்தார். முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அலுவலர் கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அருணாச்சலா பள்ளி
தாளாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலர் சட்டநாதன் தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் ஜோதிலிங்கம், நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன், சங்கமம் கல்லுாரி இயக்குநர் தர்மலிங்கம் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் அபிராமி நன்றி கூறினார்.
லட்சுமி சோரடியா பள்ளி
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பதாகான் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு கவிதை போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் தியாகு நன்றி கூறினார்.
பண்ருட்டி
பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் செல்வகணபதி தேசிய கொடி ஏற்றி வைத்தார். தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கொடி அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
சிதம்பரம் நகராட்சி
சேர்மன் செந்தில்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். ஆணையாளர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், மூத்த கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ரமேஷ், அப்பு சந்திரசேகர், மக்கின், மணிகண்டன் மற்றும் கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர், மக்கள் அருள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குள்ளஞ்சாவடி
அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜபாண்டியன், முன்னாள் மாவட்ட என்.எஸ்.எஸ்., அலுவலர் திருமுகம், வழுதலம்பட்டு ஊராட்சி முன்னாள் நிர்வாகிகள் கிருஷ்ணராஜ், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியர் ராமநாதன் வரவேற்றார். ஆசிரியர் உமா தொகுப்புரை ஆற்றினார். வேதியியல் ஆசிரியர் அருள்பிரகாஷ் நன்றி கூறினார். நாட்டுப்பண் பாடலுடன் விழா நிறைவுற்றது.
கிருஷ்ணசாமி கல்விக்குழுமம்
கிருஷ்ணசாமி ரெட்டியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். கல்வி குழுமத்தில் பாலிடெக்னிக் கல்லுாரி, பொறியியல்
கல்லுாரி மற்றும் மகளிர் கலைக்கல்லுாரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவ,
மாணவியர் அணிவகுப்பு நடந்தது. அறக்கட்டளை செயலாளர் விஜயகுமார், கல்லுாரி முதல்வர்கள் ரமேஷ்பாபு, இளங்கோ, நிர்மலா, துணை முதல்வர்கள் வாசுதேவன், ரகு சந்திரமவுலி கார்த்திகேயன், அருள்கார்த்திகேயன் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
வடலுார் வள்ளலார் குருகுல பள்ளி
ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கி,
தேசிய கொடியேற்றினார். பின் காந்தி உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. ராஜாவெங்கடேசன், லதா ராஜாவெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் ராமானுஜம், தலைமை ஆசிரியை பூர்ணிமாதேவி, முதுகலை தமிழ் ஆசிரியை திலகவதி, தமிழ் ஆசிரியர் பழனிவேல், நாராயணன், நளினி, நவமணி, பிரபாவதி, ஜெயராஜ், வீராசாமி பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் வேலவன் நன்றி கூறினார்.
சரஸ்வதி வித்யாலயா பள்ளி
துறைமுகம் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் வரவேற்றார். மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பரங்கிப்பேட்டை
பேரூராட்சியில் நடந்த விழாவிற்கு சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செயல் அலுவலர் மயில்வாகனன் வரவேற்றார். துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன், கவுன்சிலர்கள், ராஜேஸ்வரி வேல்முருகன், தையல்நாயகி கணேசன், ரொகையாமா குன்முகமது, ஜாஸ்மின் நிகார் அஜீஸ் அகமது, ராஜகுமாரி மாரியப்பன், முன்னாள் நகர செயலாளர்கள் முனவர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர். ஜோதி நன்றி கூறினார்.