ADDED : ஜன 27, 2026 04:08 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப் பட்டது.
அரிஸ்டோ பப்ளிக் பள்ளி பள்ளி வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், பள்ளி தலைவர் சிவக்குமார் தேசியக்கொடியேற்றி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் மதுரபிரசாத் பாண்டே, துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
லட்சுமி சோரடியா பள்ளி கடலுார் எஸ்.எஸ்.ஆர்.,நகரில் உள்ள லட்சுமி சோரடியா பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், தலைமையாசிரியர் பதாகான் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதை, பேச்சுப்போட்டிகளில் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் டாக்டர் மாவீர்மல் சோர்டியா, தலைமையாசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா, ஆசிரியை சித்ரா கலந்து கொண்டனர்.
அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், தாளாளர் பன்னீர்செல்வம் தேசிய கொடியற்றி, மாணவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். செயலாளர் சட்டநாதன் முன்னிலை வகித்ததார். முதல்வர் ஜோதிலிங்கம் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். இயக்குனர்கள் திராவிடஅரசு, ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். துணைமுதல்வர் அபிராமி நன்றி கூறினார்.
அட்சயாமந்திர் மேல்நிலைப் பள்ளி பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சயா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
ஓய்வுப்பெற்ற உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துசுகுமார் பங்கேற்று, தேசியக்கொடி ஏற்றினார். கலை நிகழ்ச்சிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பாலாஜி மேல்நிலைப் பள்ளி வேப்பூர் அடுத்த நல்லுார் � பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி தாளாளர் அன்புக்குமரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார். விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா, நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி புவனகிரி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தலட்சுமி, உறுப்பினர் கந்தழகி முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை எழிலரசி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை சரவண ஜான்சிராணி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியை செந்தில்வடிவு நன்றி கூறினார். தமிழாசிரியை அரசு தொகுத்து வழங்கினார்.
சரஸ்வதி வித்யாலயா பள்ளி கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம் தேசிய கொடியேற்றினார். பள்ளி முதல்வர் சாம்உதயகுமார் வரவேற்றார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.
ரிஷப் ஜெயின் பள்ளி விருத்தாசலம் ஸ்ரீ ரிஷப் ஜெயின் சிறப்பு பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில், பள்ளி தாளாளர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார்.
அரிமா சங்க தலைவர் வெங்கடாஜலபதி, செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாலு, நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், ராஜகோபால், விஸ்வநாதன், ரமேஷ், சுந்தர்ராஜ், ஜெய்சந்த், பிரபு, கணேஷ், காசிநாதன், தமிழ்மணி, சந்திரசேகர், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடலுார் பத்மாவதி நகர் கடலுார் பத்மாவதி நகர் சங்கம் சார்பில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலை வகித்தார். சங்கத்தலைவர் தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். சங்கத்தின் செயலாளர் மகாதேவ்சிங், துாய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கினார். சங்க நிர்வாகி உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சங்க தலைவர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
