ADDED : ஜன 24, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். விழாவில் போலீசார் அணிவகுப்பு, தியாகிகள் கவுரவிப்பு, சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. நேற்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு, போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.பி., ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.