/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடியரசு கட்சி பொதுக்குழு கூட்டம்
/
குடியரசு கட்சி பொதுக்குழு கூட்டம்
ADDED : பிப் 17, 2024 11:50 PM
சிதம்பரம்: சிதம்பரத்தில் இந்திய குடியரசு கட்சி மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் கலியவிரமணி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் விஜயபாஸ்கரன் வரவேற்றார், பொதுச்செயலாளர் அசோக்ராஜ், துணைத் தலைவர் கதிர்முத்துக்குமரன், துணை செயலாளர் முகமதுஜர்ஜிஸ், இளைஞரணி செயலாளர் பழனிவேல் முன்னிலை வசித்தனர்.
புதிய நிர்வாகிகளாக, மாவட்ட தலைவராக ஆனந்தராஜ், மாவட்ட செயலாளராக பரமசிவம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குப்புசாமி, மாநில தொழிலாளர் அணிசெயலாளர் தனச்செல்வம், பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் செயபால் பேசினர்.
கூட்டத்தில், வரும் எம்.பி., தேர்தலில் கூட்டணி குறித்து பேச மாநில தலைவருக்கு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.