ADDED : ஜன 04, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்கலம்பேட்டை; மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரியும், மங்கலம்பேட்டையில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கணேசன், மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், பேரூர் தலைவர் கதிர்காமன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் ராமானுஜம் வரவேற்றார். அறிவு சமூகம் அமைப்பின் தலைவர் தமிழ் முதல்வன், எஸ்.சி., எஸ்.டி., ஊழியர் சங்க துணைத் தலைவர் புகழேந்தி, வி.சி., வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, பேரூர் செயலாளர் அம்பேத்கர், மா. கம்யூ., கட்சி பேரூர் செயலாளர் ரமேஷ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், எஸ்.டி.பி.ஐ., இர்பான், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் கதிர்வேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

