UPDATED : ஜூன் 18, 2026 07:09 PM
ADDED : ஜூன் 18, 2026 06:21 PM
பெண்ணாடம்:சுடுகாட்டு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் அடுத்த வடகரை ஊராட்சி, நந்திமங்கலம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள சுடுகாடு சாலையை பயன்படுத்தி இறந்தவர்களின் உடலை புதைத்தும், எரித்தும் வந்தனர். இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் முட்புதர்கள் மண்டியதால் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த, 5 மாதங்களுக்கு முன் தார்சாலை அமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஆனால் இதுவரை மற்ற பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் இறந்தவர்களின் உடலை இச்சாலையில் எடுத்த செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
எனவே, நந்திமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்ட சுடுகாடு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
