/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ் ஸ்டேண்ட் தரைதளம் சீரமைக்க கோரிக்கை
/
பஸ் ஸ்டேண்ட் தரைதளம் சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 04, 2024 05:50 AM

பண்ருட்டி: பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள பள்ளம் மேடுகளை சரிசெய்திட நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்ருட்டி பஸ் நிலையத்தில் திருவெண்ணெய்நல்லுார்,திருநாவலுார், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம் உள்ளது.
இந்த நிறுத்தத்தில் ஜல்லிகள் பெயர்ந்து பல இடங்களில் 1 அடி ஆழத்திற்கு குண்டும் குழியுமாக பள்ளம் உள்ளது. மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. பள்ளம் இருப்பது தெரியாமல் பயணிகள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டும்,காணாமல் உள்ளனர். இதற்கு நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குண்டும், குழியுமாக உள்ள பகுதியை சீரமைக்க வேண்டும்.