/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இணைப்பு பாலம் பழுது சீரமைக்க கோரிக்கை
/
இணைப்பு பாலம் பழுது சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 03, 2026 04:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: மடவாப்பள்ளத்தில் பழுதடைந்துள்ள இணைப்பு பாலத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கடலுார்-பரங்கிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வழியாக தினமும் ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன.இந்த இணைப்பு சாலையில், புதுச்சத்திரம் அடுத்த மடவாப்பள்ளம் பகுதியில் இணைப்பு பாலம் உள்ளது.
தற்போது இந்த இணைப்பு பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஆபத்தான நிலையில், எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. மடவாப் பள்ளத்தில் பழுதடைந்துள்ள, இணைப்பு பாலத்தை சீரமைக்க, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

