/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் திருப்பதி ரயில் நின்று செல்ல கோரிக்கை
/
பண்ருட்டியில் திருப்பதி ரயில் நின்று செல்ல கோரிக்கை
பண்ருட்டியில் திருப்பதி ரயில் நின்று செல்ல கோரிக்கை
பண்ருட்டியில் திருப்பதி ரயில் நின்று செல்ல கோரிக்கை
ADDED : ஜன 30, 2024 03:36 AM
பண்ருட்டி, : பண்ருட்டியில், திருப்பதி-மன்னார்குடி ரயில் நின்று செல்ல, ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டியில், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சுபாஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அருணாசலம், செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் நரேஷ்சந்த் வரவேற்றார். இதில் துணைச் செயலாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் சஞ்சீவ்ராஜ், கணேசன், சுந்தரராஜன், சுரேஷ்சந்த், செந்தில்குமார், சந்தோஷ்குமார், தினேஷ்குமார், கதிர்காமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மன்னார்குடி - திருப்பதி ரயிலை, பண்ருட்டி ரயில் நிலையத்தில் நிறுத்த வலியுறுத்தி, தெற்கு ரயில்வே தலைமை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுப்பது. பண்ருட்டி ரயில் நிலைய சாலை, மின்விளக்குகளை சீரமைக்க கேட்டுக்கொள்வது, ரயில்வே பீடர் சாலையில் உள்ள மதுபானக்கடைய இடமாற்றம் செய்ய கோருவது, ரயில் நிலையத்தை தூய்மை படுத்தும் முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.