/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொசப்பள்ளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
/
கொசப்பள்ளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
கொசப்பள்ளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
கொசப்பள்ளத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 10, 2025 01:45 AM
பெண்ணாடம் : கொசப்பள்ளம் ஊராட்சி கிராமங்களில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த கொசப்பள்ளம் ஊராட்சியில் பெரியகொசப்பள்ளம், சின்ன கொசப்பள்ளம், கீழ் இருளம்பட்டு, மேல் இருளம்பட்டு, அரியராவி ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சிறுவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் உபகரணங்கள் வசதி இல்லை.
இதனால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தனியாருக்கு சொந்தமான வயல்வெளிகள் மற்றும் ஏரிகளில் விளையாடி வருகின்றனர். இதுபோன்ற நேரங்களில், தகராறு மற்றும் கைகலப்பு உள்ளிட்டவை அடிக்கடி அரங்கேறி வருகின்றது.
இதை தவிர்க்க, கொசப்பள்ளம் ஊராட்சி கிராமங்களில் விளையாட்டு மைதானம் கட்டமைப்புகளை ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.