தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எடையூர் - பெரம்பலுார் இடையே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

எடையூர் - பெரம்பலுார் இடையே மேம்பாலம் அமைக்க கோரிக்கை

எடையூர் - பெரம்பலுார் இடையே மேம்பாலம் அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 06, 2024 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2024 04:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம் : எடையூர் - பெரம்பலுார் இடையே ஓடையின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த எடையூர் - பெரம்பலுார் இடையே ஓடையின் மீதுள்ள தரைப்பாலம் வழியாக கோவிலுார், சிறுமங்கலம், மதுரவல்லி, நரசிங்கமங்கலம், எரப்பாவூர், அருகேரி, கொத்தட்டை, பெரம்பலுார், கொடுக்கூர், பரவளூர், தொரவளூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர், நல்லுார் பகுதிகளுக்கு செல்கின்றனர்.

பராமரிப்பின்றி உள்ள தரைப்பாலம் உள்வாங்கி சேமடைந்துள்ளது. மழை காலங்களில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இரு கிராமங்களுக்கிடையே போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால், சிறுமங்கலம், கோவிலுார், எடையூர் கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விருத்தாசலம் செல்ல 10 கி.மீ., துாரமுள்ள பெண்ணாடம் வந்து அங்கிருந்து விருத்தாசலம் செல்ல வேண்டும்.

இதேபோன்று, பெரம்பலுார், கொடுக்கூர் கிராம மக்கள் பெண்ணாடம் வர 13 கி.மீ., துாரமுள்ள விருத்தாசலம் சென்று வர வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படுவதால் இரு பகுதி கிராம மக்கள், மாணவர்கள் அவதியடைகின்றனர்.

எனவே, எடையூர் - பெரம்பலுார் இடையே ஓடையின் குறுக்கே மேம்பாலம் கட்ட அமைச்சர், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us