தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலை கூடுதல் பாலம் அமைக்க கோரிக்கை

 சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலை கூடுதல் பாலம் அமைக்க கோரிக்கை

 சேத்தியாத்தோப்பு - விருத்தாசலம் சாலை கூடுதல் பாலம் அமைக்க கோரிக்கை


ADDED : நவ 29, 2025 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு-விருத்தாசலம் சாலை, ஏ.டி.சி., மதகு ஷட்டர் குறுகிய பாலம் அருகே, கூடுதல் பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சேத்தியாத்தோப்பிலிருந்து பெரியகுப்பம், சின்னகுப்பம், வீரமுடையாநத்தம், பெரியநற்குணம், பு.ஆதனுார், அகர ஆலம்பாடி, முகந்தரியாங்குப்பம், பெருவரப்பூர், கிளிஞ்சல்மேடு, சிறுவரப்பூர், கம்மாபுரம் வழியாக விருத்தாசலம் சாலை செல்கிறது.

இந்த சாலையில் சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்திலிருந்து, கட்டுக்கரை முடியும் இடத்தில் வெள்ளாறுராஜன் வாய்க்கால் குறுக்கே ஏ.டி.சி., மதகு ஷட்டர் பாலம் உள்ளது.

இந்த ஷட்டர் பாலம் கடந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கட்டப்பட்டது. இந்த குறுகலான பாலத்தினுள், எதிரே எதிரே பஸ்கள் , கனரக வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்திலிருந்து செல்லும், டவுன் பஸ்கள் ஏ.டி.சி., பாலத்தினுள், கடும் சிரமத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் கடந்து செல்கின்றனர்.

அதனால், இந்த பாலம் அருகே, போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், புதிய பாலம் கட்டுவதற்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, ஏ.டி.சி., மதகு ஷட்டர் பாலம் அருகே, புதிய பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us