sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 என்.எல்.சி.,யில் உழைப்பாளர் சிலை அமைக்க கோரிக்கை

/

 என்.எல்.சி.,யில் உழைப்பாளர் சிலை அமைக்க கோரிக்கை

 என்.எல்.சி.,யில் உழைப்பாளர் சிலை அமைக்க கோரிக்கை

 என்.எல்.சி.,யில் உழைப்பாளர் சிலை அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 01, 2026 06:21 AM

Google News

ADDED : பிப் 01, 2026 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: என்.எல்.சி., வளர்ச்சிக்காக உழைத்த தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரித்திடும் வகையில் உழைப்பாளர் சிலை நிறுவ வேண்டும் என மக்கள் விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் நிறுவன சேர்மனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளியிடம் மக்கள் விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் பாலமுருகன், ஜார்ஜ், இலக்குவன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

நெய்வேலி நகர எல்லைக் குள் காந்தியடிகள், அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, முன்னாள் தமிழக முதல்வர்கள் காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் என்.எல்.சி., உருவாக தனது 600 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய ஜம்புலிங்க முதலியார் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

சமீபகாலமாக மேலும் பல சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த மற்றும் உழைத்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களின் உழைப்பை அங்கீகரித்திடும் வகையில், உழைப்பாளர்களை கவுரவப்படுத்திடும் வகையில் நெய்வேலி ஆர்ச்கேட் போன்ற நகரின் ஏதாவது ஒரு முக்கிய இடத்தில் முழுஉருவ வெண்கல உழைப்பாளர் சிலையை நிறுவ வேண்டும்.

வரும் மே தினத்தன்று உழைப்பாளர் சிலையை திறந்து வைத்து உழைப்பாளர் தினத்தை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us