/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு பூங்கா அமைக்க கோரிக்கை
/
விளையாட்டு பூங்கா அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 14, 2025 12:41 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள கெங்கைகொண்டான் பேரூராட்சி, பழைய நெய்வேலி, பெரியாக்குறிச்சி, மேல்பாதி, கீழ்பாதி, வடக்குவெள்ளுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமனோர் வசிக்கின்றனர்.
மந்தாரக்குப்பத்தில் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம், நிர்வாக அலுவலகம், மருத்துவமனை, பள்ளிகள், மார்க்கெட், வங்கிகள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் நவீன வசதிகளுடன் விளையாட்டு பூங்கா இல்லாததால் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்களுக்கு பொழுது போக்கு இடம் இல்லாததால் கடும் சிரமம் அடைகின்றனர்.
எனவே என்.எல்.சி., பகுதியில் காலியாக உள்ள பகுதிகளில் என்.எல்.சி.,யின் சி.எஸ்.ஆர்., நிதியில் நவீன விளையாட்டு பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.