/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை
/
போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை
ADDED : டிச 20, 2025 06:39 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு நான்குமுனை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சென்னை-கும்பகோணம் சாலை, விருத்தாசலம்-புவனகிரி சாலை ஆகிய நான்கு முனை சந்திப்பு உள்ளது.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பில் கும்பகோணத்திலிருந்து பஸ்கள், லாரிகள் மற்றும் விருத்தாசலத்திலிருந்து புவனகிரி, பரங்கிப்பேட்டைக்கு மீன்லோடு ஏற்றி செல்லும் லாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த நான்கு முனை சந்திப்பில் சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு நான்கு முனை சந்திப்பினை, கனரக மற்றும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் சிறுசிறு வாகனங்கள் கடக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகின்றன.
இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து போக்குவரத்து சிக்னல் அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

