ADDED : ஏப் 26, 2026 09:14 PM

பரங்கிப்பேட்டை: நான்கு வழிச்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலையை சமப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம்- நாகப்பட்டிணம் நான்கு வழிச்சாலைக்கு, பரங்கிப்பேட்டை அடுத்த, பு.முட்லுார் வெள்ளாற்று பாலம் அருகே கனகபாளையம், தொட்டிமேடு ஆகிய கிராமங்களுக்கு இணைப்பு சாலை செல்கிறது.
இச்சாலை, நான்கு விழிச்சாலையில் இருந்து, 10 அடி செங்குத்தாக போடப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த சாலை வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், பைக்கில், நான்கு வழிச்சாலையில் இருந்து கிராம சாலைக்கு கீழே இறங்கி செல்லும்போதும், கிராமச் சாலையில் இருந்து, நான்கு வழிச்சாலைக்கு மேலே ஏறி செல்லும்போது, அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.
இதனால் விபத்துகளை தடுக்க, நான்கு வழிச்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலையை சமப்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
