/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெருங்கும் பண்டிகை திருட்டை தடுக்க கோரிக்கை
/
நெருங்கும் பண்டிகை திருட்டை தடுக்க கோரிக்கை
ADDED : அக் 07, 2025 12:21 AM
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க மந்தாரக்குப்பம் பகுதி மக்கள் கடலுார் மற்றும் விருத்தாசலம் பகுதிக்கு பஸ்களில் அதிகளவில் செல்கின்றனர். இதனால், மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட எந்நேரமும் அதிகளவில் காணப்படுகிறது.
பயணிகளின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ் ஸ்டாண்டில் நகை, பணம் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, போலீசார், பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடை வீதிகளில் போலீசார் பாதுகாபபு பணியில் ஈடுபட வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.