UPDATED : அக் 07, 2026 04:50 PM
ADDED : அக் 07, 2026 04:44 PM
அ நிறம் | அளவு
கிள்ளை: சிதம்பரம் அரசு கல்லுாரியில், பட்டம் பெறாத மாணவர்கள் பட்டம் பெற தங்கள் துறை தலைவர்களிடம் பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என கல்லுாரி முதல்வர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சிதம்பரம் அரசு கல்லுாரி மாணவர்கள், வேலுார் மற்றும் திருவள்ளூவர் பல்கலையில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று விடப்பட்டுள்ள மாணவர்களுக்கு வரும் 22ம் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது.அதையொட்டி, தேர்ச்சி பெற்று இதுவரை பட்டம் பெறாத மாணவ, மாணவிகள் தங்கள் துறைத் தலைவரிடம் பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
