தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆபத்தான மரத்தை  அகற்ற கோரிக்கை

ஆபத்தான மரத்தை  அகற்ற கோரிக்கை

ஆபத்தான மரத்தை  அகற்ற கோரிக்கை


ADDED : அக் 07, 2025 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் தேத்தாம்பட்டு கிராமத்தில் உள்ள பாலத்தின் அருகே சாலையோரத்தில் பட்டுப்போன நிலையில் மரம் உள்ளது. தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் காற்றுடன் கூடிய மழை பெய்யும் போது மரம் முறிந்து சாலையில் செல்வோர் மீது விழும் அபாயம் உள்ளது.

பெரிய அளவில் விபத்து நடப்பதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us