/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரி கரையில் கருவேல மரங்கள் அகற்ற கோரிக்கை
/
ஏரி கரையில் கருவேல மரங்கள் அகற்ற கோரிக்கை
ADDED : மே 22, 2025 11:26 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரி கரையோரங்களில் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்ட சீமை கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி லால்பேட்டை வரை 14 கி.மீ., நீளம், 5 கி.மீ., அகலம் உள்ளது. பூதங்குடி முதல் பரிபூரணநத்தம், வெய்யலுார், வாழைக்கொல்லை வரை வீராணம் ஏரி கரையோரங்களில் சீமை கருவேல மரங்கள் படர்ந்துள்ளது. இதனால், நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.
கோடை காலங்களில் ஆண்டிற்கு ஒருமுறையாவது ஏரியின் கரையோரங்களில் உள்ள புதர்கள் மற்றும் கருவேல மரங்களை பொதுப்பணித்துறையினர் அகற்றி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரையோரங்களில் முட்புதர்கள், சீமை கருவேல மரங்களை அகற்றாமல் உள்ளதால் காடு போல் படர்ந்துள்ளது. எனவே, சீமை கருவேல மரங்களை அகற்ற லால்பேட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.