ADDED : ஜூலை 13, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி : கிராம சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குறிஞ்சிப்பாடி அடுத்த கீழூர் ஊராட்சியில் இருந்து, வெங்கடாம்பேட்டை செல்லும் இணைப்பு சாலை உள்ளது. முந்திரி தோப்புகளின் நடுவே செல்லும் இந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.
தினசரி இவ்வழியாக விவசாயிகள், கிராம பொதுமக்கள் நெய்வேலி - இந்திரா நகர் பகுதிக்கு செல்கின்றனர். மேலும் விவசாய பணிகளுக்கான வாகனங்களை விவசாயிகள் இந்த வழியாக இயக்கியும் வருகின்றனர். மோசமான நிலைமையில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.