ADDED : ஜூன் 04, 2026 09:54 AM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி அருகே நுாலகத்தை மீண்டும் துவக்க கோரிக்கை எழுந்துள்ளது.
புவனகிரி அடுத்த பி.உடையூரில் கிராம நுாலகம் இயங்கியது. அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெற்று வந்தனர்.
இந்த நுாலகஇடத்தை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மின்துறைக்கு அலுவலகம் அமைப்பதற்காக வழங்கினர்.
இதனால் இங்கு இருந்த நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் அங்கு போதிய இடவசதி இல்லாமல் புத்தகங்களை மூட்டை கட்டி வைத்தனர்.
இதனால் புத்தங்கள் சேதமடைந்து வருகிறது. எனவே, உரிய இடத்தில் மீண்டும் நுாலகத்தை அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
