/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்று கரையை சீரமைக்க கோரிக்கை
/
பெண்ணையாற்று கரையை சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 22, 2024 09:25 AM

நெல்லிக்குப்பம் : வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த பெண்ணையாற்றின் கரையை சீரமைக்க வேண்டும் என பகண்டை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தனுார் அணை நிரம்பியதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி நள்ளிரவு விநாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக இந்த ஆற்றில், சொர்ணாவூர் தடுப்பணை அருகே கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பகண்டை அருகே ஆற்றின் கரை உடைந்து சின்ன பகண்டை, பெரிய பகண்டை கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளை பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்ததால், மக்களை படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். பல நூறு ஏக்கர் பரப்பில் விவசாய பயிர்கள் நாசமாகின. வெள்ளம் வடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும், ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாமல் உள்ளனர்.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஆற்றின் கரையை தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு சரி செய்து உள்ளனர்.
ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும்போது கரை உடைந்து ஊரினுள் தண்ணீர் புகுந்து சேதமாகிறது. எனவே இப்பகுதியில் ஆற்றின் கரையை கான்கிரீட் சுவர் கட்டி, வெள்ள பாதிப்பை தடுக்க வேண்டும் என்றனர்.