ADDED : ஜன 15, 2026 08:06 AM
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் இருந்து பெ.பூவனுாருக்கு இரவு நேரத்தில் செல்லும் அரசு பஸ்சை மீண்டும் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடத்திலிருந்து அரியராவி, ஓ.கீரனுார் வழியாக (தடம் எண் 5, 14, 20) அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களை பயன்படுத்தி இப்பகுதி கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். பெண்ணாடத்தில் இருந்து பெ.பூவனுாருக்கு இரவு 9:30 மணியளவில் இயக்கப்பட்ட பஸ் (தடம் எண் - 20) எவ்வித அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது.
இதனால் இரவு நேரத்தில் வெளியூர்களில் இருந்து வரும் பெ.பூவனுார், ஓ.கீரனுார் செல்லும் கிராம மக்கள் 10 கி.மீ., துாரம் நடந்து செல்லும் நிலை உள்ளது. பெண்கள், சிறுவர்கள், முதியோர் அச்சமடைகின்றனர்.
கிராம மக்கள் நலன்கருதி, பெ.பூவனுாருக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
