தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலுார் வழியாக அரசு பஸ்களை இயக்க கோரிக்கை

 பாலுார் வழியாக அரசு பஸ்களை இயக்க கோரிக்கை

 பாலுார் வழியாக அரசு பஸ்களை இயக்க கோரிக்கை


ADDED : பிப் 19, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: கடலுாரிலிருந்து திருவந்திபுரம், பாலுார் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்களை இயக்கிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுாரிலிருந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி வழியாக கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சேலம், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடலுாரில் இருந்து திருவந்திபுரம், பாலுார், திருவதிகை வழியாக பண்ருட்டிக்கு அரசு டவுன் பஸ்களை மட்டுமே இயக்கி வருகின்றனர்.

திருவந்திபுரம் வழிதடத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் கள்ளக்குறிச்சி,சேலம் உள்ளிட்ட பல வெளியூர்களுக்கு செல்ல பண்ருட்டிக்கு சென்று அங்கிருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரம் வீணாகி வருகிறது.

கடலுாரிலிருந்து நெல்லிக்குப்பம் வழியாக வெளியூர்களுக்கு பல தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில்,அரசு பஸ்களும் அதே வழிதடத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அரசு பல புதிய வழிதடத்தில் பஸ்களை இயக்கி வந்தாலும்,இந்த பாலுார்,திருவந்திபுரம் வழியாக புதிய வழிதடங்களை உருவாக்கி பஸ்களை இயக்கிட முன்வராதது ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதனால் பாலுார், திருவந்திபுரம் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல அரசு பஸ்களை இயக்கிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us