/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலையில் சட்டப்படிப்பு துவங்க கோரிக்கை
/
அண்ணாமலை பல்கலையில் சட்டப்படிப்பு துவங்க கோரிக்கை
ADDED : மார் 15, 2025 08:52 PM
புவனகிரி; சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டப் படிப்பு துவங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும் என, ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1980ம் ஆண்டுகளில் இயங்கி வந்த இளநிலை சட்ட பட்டப் படிப்பு சில நிர்வாக காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதனால் கடலுார் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மாணவர்கள் சட்டப் படிப்பு கனவாக மாறியது. தற்போது தமிழகத்தில் மொத்தம்14 அரசு சட்டக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. இவைகளில் போதிய அளவுக்கு மாணவர்கள் சேர முடியவில்லை.
இதனால் பலர் அதிக செலவு செய்து தனியார் சட்டக் கல்லூரிகள் மற்றும் அண்டை மாநிலங்கள் சென்று சட்டம் பயிலும் நிலை தொடர்கிறது. தமிழக கல்வித்துறை உயர் கல்வித்துறை அமைச்சர் கடந்த 2021ல், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, மீண்டும் பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பு துவங்கப்படும் என்றார். ஆனால் அதற்கான எந்த பணிகளும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
எனவே, கடலுார் மாவட்டத்தில் ஏழை, எளிய மற்றும் பட்டியலின மாணவர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் சட்டப்படிப்பை துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.